நோர்வேக்கு சட்டவிரோதமாக ஏற்றப்படவிருந்த நண்டுகள் கைப்பற்றப்பட்டன.
நோர்வேயிற்கு ஏற்றுமதி செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இலங்கைக்கே உரித்தான மிக அபூர்வ இன நண்டுகள் அடங்கிய 29 பெட்டிகள், சுங்க திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளன. அலங்கார மீன்கள் ஏற்றுமதி செய்யப்படும் விதத்தில், இவை பொதி செய்யப்பட்டிருந்ததாகவும், மொத்தம் 125 உயிருள்ள நண்டுகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவை ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட நண்டு வகைகளாகும். இந்நண்டுகள், அரசுடமையாக்கப்பட்டதுடன், தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அனுப்புவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment