Friday, January 4, 2013

சுறுசுறுப்பா இருந்தால் ஆயுள் கூடும்!

சிலரைப் பார்த்தால் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அவர்களது முகத்திலும் ஒரு பிரகாசம் தெரியும்.இன்னும் சிலர் இருக்கிறார்கள்; என்னத்த செஞ்சு... என்னத்த நடக்க... என்று எப்போதும் படுசோம்பேறிகளாக இருப்பார்கள்.இந்த இரு தரப்பினரில் யாருக்கு ஆயுள் அதிகம் என்று அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்..

காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கையறைக்கு செல்லும் வரை என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது பற்றிய கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன.

ஆய்வின் முடிவில், நீங்கள் எதிர்பார்த்தது போலவே சுறுசுறுப்பாக செயல்படுபவர்களுக்குத்தான் ஆயுள் அதிகம் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சோம்பேறிகளாக திரிபவர்களைக் காட்டிலும் 4 ஆண்டுகள் அதிகம் உயிர் வாழ்கிறார்களாம்.

இந்த ஆய்வின் மூலம் சுறுசுறுப்பாக இருப்பவர்களின் ஆயுள் ரகசியம் எது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரகசியம் உடற்பயிற்சிதான்!

தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதும், அதன் காரணமாக ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் மூளைக்கு அதிகமாக கொண்டு செல்லப்படுவதும், இதனால் ஞாபக சக்தி அதிகரித்து சுறுசுறுப்பு கிடைப்பதும் ஆய்வில் தெரிய வந்தது.

மேலும், தினமும் உடற்பயிற்சி செய்து வருபவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது பெரும்பாலும் தடுக்கப்படுகிறது என்பதும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீங்களும் சுறுசுறுப்பாக வேண்டும் என்றால், தினமும் உடற்
பயிற்சி செய்யுங்கள். எடுத்தவுடன் மணிக்கணக்கில் செய்ய முயற்சிக்க வேண்டாம். முதலில் 5 நிமிடங்கள் செய்யுங்கள். அதன்பிறகு படிப்படியாக நேரத்தை அதிகரியுங்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com