காட்டுவாசிகளின மொழியிலும் தேசிய கீதம் வேண்டும். -எல்லாவல மேதானந்த தேரர்
இலங்கையில் எதிர்காலத்தில் காட்டுவாசிகளின் மொழியிலும் தேசிய கீதம் பாடநேரிடும் என எல்லாவல மேதானந்ததேரர் தெரிவித்துள்ளார். நினைத்த மாதிரி தேசிய கீதத்தில் புதிய மொழிகளை இணைக்கக் கூடாது. தேசிய கீதத்தில் தமிழ் மொழியை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படுகின்றது. எந்தவொரு நாட்டிலும் தேசிய கீதம் பிரதான மொழியில் பாடப்படுவது வழமையாகும்.இலங்கையில் பல இன மக்கள் வாழ்கின்றார்கள் என்பதற்காக தேசிய கீதத்தை பல மொழிகளில் பாடினால் அது குழப்பமாகிவிடும் என குறிப்பிட்டதுடன் தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட வேண்டும் என தமிழ் மக்கள் கேட்கவில்லை மக்களின் மனதை குழப்பிவிட்டு அதில் தமது அரசியலை மேற்கொள்ள திட்மிட்டுள்ள அரசியல் வாதிகளே இவ்வாறு செயற்படுகின்றனர் எனவே மக்கள் அனைவரும் விளிப்பாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டார்.
இவர்கள் கேட்பது போன்று தமிழ் மொழியில் தேசிய கீதம் இணைக்கப்பட்டால், எதிர் காலத்தில் காட்டுமொழிகளையும் இணைக்க நேரிடும் என குறிப்பிடப்பட்டதுடன் வடக்கு, கிழக்கில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளே அதிகம் காணப்படுகிறது இவற்றில் சிங்கள மொழி இணைக்கப்பட வேண்டும் என எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment