Saturday, January 5, 2013

களணி பிரதேச சபை உறுப்பினர் சுட்டுப்படுகொலை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வசமள்ள களனி பிரதேசசபையின் உறுப்பினர் ஹசித்த மடவல, இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று மாலை உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவரது வீட்டுக்கருகில் வைத்து அவர்மீது இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த நிலையில கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹசிக்க மடவல சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.

1 comment:

  1. It is really sorrowful the gun culture is spreading in a terrible speed ,if you are not putting a strong end to this cruel culture,the results would be disasterous.Life of every citizen could be unsafe.Better to Nip in the Bud.

    ReplyDelete