கோத்தபாயவிடம் கைமாறுகின்றதாம் ஐபிசி வானொலி. நெடியவனின் கறுப்பு
புலிகளின் சொத்துக்களுக்காக புலம்பெயர் புலிகளின் எச்சசொச்சங்கள் தமக்குள்ளே அடிபடுகின்றன. தமது எதிரணியினர் மீது வசைபாடுவதற்கும் , துரோகிப்பட்டம் சூட்டுவதற்கும் என்றே பல ஊடகங்கள் இயக்கப்படுகின்றன. இந்தவரிசையில் நெடியவன் தரப்பினரால் வெளியிடப்படும் கறுப்பு எனும் இதழ் ஐபிசி வானொலியை அதன் உரிமையாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் விற்பனை செய்யவுள்ளதாக தெரிவிக்கின்றது.
மேலும் குறித்த வானொலியின் உரிமையாளருக்கு நீண்டநாட்களாக இலங்கை அரசுடன் தொடர்பு உண்டு என அவ்விதழ் கூறுகின்றது. அவ்வாறாயின் குறித்த வானொலியில் சென்று புலித்தேசியம் பாடியோரது நிலை என்ன அவர்களையும் சக்தி காட்டிக்கொடுத்திருப்பாரா என அவ்வானொலி நிகழ்சியில் கலந்து கொள்ளும் நேயர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
குறித்த இதழில் வெளிவந்த செய்தியை வாசகர்களுக்கு அப்படியே விட்டு விடுகின்றோம்.
மே 18 வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபற்றற்ற ஊடகமாக விளங்கிய ஐ.பி.சி வானொலியை சிங்கள அரசிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அதன் தற்போதைய உரிமையாளரான சதி என்றழைக்கப்படும் தேசவிரோதி சத்தி அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் இணையம் தாக்குதலுக்கு இலக்காகிய பொழுது சிங்கள அரசுடன் தொடர்பைப் பேணிய பலரது மின்னஞ்சல்கள் வெளிவந்திருந்தன. இதில் ஐ.பி.சி வானொலியின் மின்னஞ்சலும் காணப்பட்டது.
இது தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஐ.பி.சியின் நிர்வாகப் பணியாளர்களுடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்திய அதன் தற்போதைய உரிமையாளரான தேசவிரோதி சத்தி, தமக்கும் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் உள்ள தொடர்பு
உண்மை என்றும், தன்னால் இனியும் பெரும் தொகையில் ஐ.பி.சி வானொலிக்குப் பணம் செலவழிக்கமுடியாது என்றும், அதன் காரணமாக வானொலியை கோத்தபாயவிடம் கையளிப்பதற்கு தான் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன்பொழுது தமிழ் மக்களை மிகவும் கேவலமாக தகாத வார்த்;தைகளால் திட்டித் தீர்த்த தேசவிரோதி சத்தி, தமிழ் மக்களை நம்ப முடியாது என்றும், ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம், சம்பந்தன் போன்றோருக்கு துரோகப் பட்டம் கட்டியமை போன்று தனக்கும் துரோகப் பட்டம் கட்டப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமிர்தலிங்கத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்தது தவறு என்று கூறும் இவர், சம்பந்தருக்கு எதிராக செய்தி வெளியிட்ட அதிர்வு எனும் இணையத்தளத்தையும், அதன் உரிமையாளரான ஊடகவியலாளர் திரு.கண்ணன் என்பவரைவும் மிகவும் கேவலமாக திட்டித் தீர்த்துள்ளார்.
தான் கூறுவது ஒலிப்பதிவு செய்யப்பட்டு இணையத்தளங்களில் வெளிவந்தாலும் தனக்குக் கவலை இல்லை என்றும் இச்சந்திப்பின் பொழுது இறுமாப்பாக இவர் கூறுகின்றார். இதன்பொழுது இவரது துணைவியாரும் பிரசன்னமாகியிருந்ததாக தெரிய வருகின்றது.
தேசவிரோதி சத்தியின் இவ்உரையை ஒலிப்பதிவு செய்த ஐ.பி.சி வானொலியின் ஒலிபரப்பாளர் ஒருவர் அதனை எம்மிடம் கையளித்துள்ளார்.
கனவான் போன்று பிரித்தானியாவாழ் தமிழீழ மக்களிடையே வலம் வரும் சத்தியின் சுயரூபத்தை மக்களிடையே வெளிக்கொணரும் நிமித்தம் ஒலிப்பதிவை இவ் இதழுடன் இணைத்துள்ளோம். இவ் ஒலிப்பதிவில் அவதூறான – நாகரீக வரம்புகளுக்கு விரோதமான சொற்பிரயோகங்கள் காணப்படுவதால் சிறுவர்கள் அருகில் இருக்கும் பொழுது இதனை செவிமடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
1 comments :
தலைவரும் தன்னுடைய கோமணத்திலிருந்து யாவற்றையும் கோட்டாவிடம்தான் கொடுத்திட்டு போனவர். வாரிசுகளும் இறுதியாக யாவற்றையும் அவரிடம்தான் கொடுக்கவேண்டும். கே.பி என்ன முட்டாளா?
Post a Comment