தன்னுடைய வழக்கறிஞர் ரொமேஷ் ஐ திட்டித் தீர்த்த முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி!
பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா தன்னுடைய வழக்கறிஞர்களில் ஒருவரான ரொமேஷ் த சில்வாவுக்கு தீய வார்த்தைகளால் ஏசியுள்ளதாகத் தெரியவருகிறது. சென்ற வெள்ளிக்கிழமை குற்றவியல் பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட முன்னர், முன்னாள் நீதியரசர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதற்கு முயன்றுள்ளார்.
ஆயினும், அதனைத் தடுத்து வழக்கறிஞர் ரொமேஷ் த சில்வா, தனக்கு அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவருடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும், குற்றப் பிரேரணையை விவாதத்திற்கு எடுக்காமல் அதனை கால நீடிப்புச் செய்வதாகவும் தன்னிடம் குறிப்பிட்டதாகக் குறிப்பிடுகின்றார் முன்னாள் நீதியரசர்.
அதனைத் தான் நம்பிய முன்னாள் நீதியரசர் தன்னுடைய இராஜினாமாவை கால நீடிப்புச் செய்துள்ளார். எதுஎவ்வாறாயினும், வெள்ளிக்கிழமை குற்றவியல் பிரேரணை பாராளுமன்றத்தின் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பப்பட்டதுடன், அவர் குறித்த அதிகாரப் பத்திரங்களில் கையொப்பமிட்டதோடு குற்றவியல் பிரேரணைச் செயற்பாடுகள் நிறைவுக்கு வந்துள்ளன.
இதனால் மிகவும் நொந்துபோயுள்ள முன்னாளர் நீதியரசர், தன்னுடைய வழக்கறிஞர் தன்னை ஏமாற்றியுள்ளதாகக் கூறி பெருஞ்சத்தத்துடன் ஏசியிருக்கிறார்.
பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளமையால் ஓய்வூதியம் கிடைக்காமை, உலகில் எங்கும் எந்தவொரு பதவியையும் பெற்றுக்கொள்ள முடியாமை என்பவற்றால் மேலும் அவர் கோபமுற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment