என் மகள் வாழ்ந்த வீட்டை இடிக்க வேண்டாம் ரிசானாவின் தாயார் இராணுவத்திடம் கோரிக்கை- புது வீட்டுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
என்னுடைய செல்லம் வாழ்ந்த வீட்டை உடைக்க வேண்டாம் என்று இராணுவத்தினரிடம் ரிசானாவின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.மூதூர் சாபி நகரில் வசிக்கும் ரிசானாவின் பெற்றோருக்கு வீடொன்றைக் கட்டிக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வெள்ளிக்கிழமை இராணுவத்தின் 22 ஆவது படையணியின் பிரிகேடியர் அருண வன்னியாராச்சி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ரிசானாவின் தாயாரான அஹமது செய்யது பரீனா மற்றும் தந்தை மொஹமது சுல்தான் நபீக் ஆகியோரே அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
இதன்போது சவூதியில் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட தனது மகளான ரிசானா நபீக் வாழ்ந்த குடிசையை உடைக்காமலே தங்களுக்கான புதிய வீட்டை கட்டுமாறு ரிசானாவின் தாயார் இராணுவத்தினரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை இவ்வீட்டு நிர்மானங்களுக்கு பொறுப்பாக இராணுவத்தின் 224 ஆவது படையணி தலைமை அலுவலகத்தின் கர்னல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment