மன்னாரில் வீட்டுக்குள் வந்து போன வேற்றுக்கிரகவாசி ? படம் இணைப்பு
மன்னார், பெரியகடை பகுதியில் உள்ள வீடொன்றினுள் வேற்றுக் கிரகவாசி போன்ற மர்ம மனிதர் ஒருவர் திடீரென வந்து மறைந்ததாக குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ள பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த மர்ம நபர் சில நிமிடங்கள் மட்டும் தென்பட்டதாகவும் அதன் பின்னர் அவர் மறைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றதாகவும் தனது வீட்டுக்குள் புகுந்த மர்ம உருவம் கொண்ட நபரை தான் கையடக்கத்தொலைபேசி மூலம் படம் பிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் மத்தியல் ஒரு வித பீதியும் பயமும் உண்டாகியுள்ளது.
0 comments :
Post a Comment