Tuesday, January 15, 2013

ரிசானாவின் மரணதண்டனையின் பின் பெண்களுக்கு புதிய சட்டம்!

வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்காக செல்லும் பெண்களின் வயது குறைந்தபட்டசம் 25க்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதுடன் இனி 25 வயதிற்கு குறைந்தவர்கள் வெளிநாட்டுக்கு பணிபெண்களாக செல்லத் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளுடன் தொழில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடும் போது சஹரிய சட்டங்கள் மற்றும் இலங்கை சட்டங்கள் கருத்திற்கொள்ளப்படும் எனவும் உடன்படிக்கைகளின் போது தொழிலாளர்களின் நலன்களை உறுதி செய்யக் கூடிய வகையிலான நிபந்தனைகள் உள்ளடக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதுமட்டுமில்லாது 25 வயதிற்கு குறைந்த பெண்களை வயது கூடியவர்கள் போன்று மாற்றி வெளிநாடுக்கு வேலைக்கு அனுப்புவது கண்டு பிடிக்கப்பட்டால் அந்த முகவர் நிலையம் மூடப்படுவதுடன் முகவர் நிலையங்களின் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  January 15, 2013 at 2:59 PM  


It is not enough. Sri Lanka and other countries should stop anyone go to the Barbaric Arabian countries.
We may be poor, but, we are humans.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com