ஆயர்களிடம் கண்ணீர் விட்டு அழுத முல்லைத்தீவு பெற்றேர்!
வன்னியில் இறுதிப்போரின் போது காணாமல்போன எமது பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து எமக்குத் தெரியப்படுத்துங்கள் என முல்லைத்தீவுக்கு வியயம் மேற்கொண்ட இலங்கை ஆயர் மன்றத்தின் தலைவர் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான குழுவிடம் பெற்றோர்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவர்கள் முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலைப்பகுதியில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களை நேரில் சந்தித்த பேதே பெற்றோர் ஆயர்களிடம் மேற்கண்ட கோரிக்கையை விடுத்தனர். "இறுதிப் போரின் போது எமது பிள்ளைகள் பலர் காணாமற்போயுள்ளனர். பலர் படையினரிடம் சரணடைந்தனர். ஆயினும் எமது பிள்ளைகள் எங்கே இருக்கிறார்பகள்? இவர்களுக்கு என்ன நடந்தது? என்பது தொடர்பில் எதுவும் தெரியாது கடந்த மூன்றுவருடங்களாக காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
எங்களில் அதிகமானவர்களுக்கு வீட்டுத்திட்டங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை இருந்த போதும் பிரதேச இராணுவத்திர் எங்களுக்கு ஒரு சில வீடுகளை அமைத்து கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மக்களின் கோரிக்கைகள் குறித்து கருத்து வெளியிட்ட மட்டக்களப்பு ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை, எல்லா மக்களும் மோசகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் புதிய வாழ்வை ஆரம்பிக்க வேண்டும். நேரில் வந்து அவர்களுடைய நிலைமையை பார்த்துள்ளோம். இந்த மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து அரசுடன் பேசி உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்என தெரிவித்தார்.
1 comments :
சனங்கள் சரியான ஆட்களிடம் கேட்டுள்ளனர். காரணம் இந்த ஆயர்மார்தான் புலிகளுக்கு ஆட்களை தேடி கொடுத்தனர் என்பது சனங்களுக்கு நன்றாக தெரியும். இவனுகளை பிடியுங்கோ உங்கட பிள்ளையள் நிச்சயம் கிடைக்கும்.
Post a Comment