ஹலால் சான்றிதழ் பெற்றுக்கொள்ளுமாறு முஸ்லிம் சமூகம் யாரையும் பலவந்தப்படுத்தவில்லை - முஸ்லிம் காங்கிரஸ்
எந்தவொரு உற்பத்தியாளருக்கும், ஒருபோதும் ஹலால் சான்றிதழ் பெற்றுக்கொள்ளுமாறு முஸ்லிம் சமூகம் பலவந்தப்படுத்தவில்லை என இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி தெரிவிக்கிறார். இதனால் ஹலால் சான்றிதழ் தொடர்பாக இந்நாட்களில் நாட்டில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள குற்றச்சாட்டு வெறும் போலியானது என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஹலால் சான்றிதழ் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ‘ஹலால் சான்றிதழ் இஸ்லாமிய மத அடிப்படையில் செய்யப்பட்டவற்றுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. எங்கள் மதத்திற்கேற்றாற் போல நாங்கள் பயன்படுத்த வேண்டியது ஹலால் சான்றிதழ் கொண்ட உணவுகளையே. அதனால்தான் ஹலால் சான்றிதழ் பதிக்கப்பட்ட உணவுகளை வாங்குகின்றோம்.
இந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் எங்களுக்கு மதச் சுதந்திரம் உள்ளது. இந்த கட்டவிழ்க்கப்பட்டுள்ள பிரச்சினை பற்றி எல்லோரும் தெளிவடைய வேண்டும். ஹலால் சான்றிதழை ஏனைய உற்பத்தியாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டளை யாருக்கும் விதிக்கப்படவில்லை.’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment