நாங்கள் சொல்வதை செய்வோம்! செய்வதை சொல்வோம்! குமுறுகிறார் மஹிந்தர்.
நாங்கள் சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம். என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை, அலரி மாளிகையில் இடம்பெற்ற சுவர்ண புறவர விருது வழங்கள் விழாவின் போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தெரிவிக்கையில்,
மக்கள் விடுதலை முன்னணி காலையில் ஒரு கதையும் மாலையில் மற்றொரு கதையும் சொல்லும். ஆனால், எங்களால் அப்படி செய்ய முடியாது. நாங்கள் சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம்.
பொதுமக்கள் ஒருபோதும் மக்கள் பிரதிநிதிகளுக்காக இல்லை. மக்கள் பிரதிநிதிகளே பொதுமக்களுக்காக உள்ளனர்' என்றும் சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment