அமெரிக்க விசேட குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது ?
அமெரிக்க விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையின் நிலைமைகளை ஆராயவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் அரசியல் ஆகிய துறைகளைச் சார்ந்த துணை இராஜாங்கச் செயலாளர்கள் அடங்கிய குழுவினரே இவ்வாறு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரியவருகின்றது..
இவர்கள் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் பணிப்பிலேயே இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இக்குழவினர் பிரதம நீதியரசர் பதவி விலக்கப்பட்டமை, ;றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் இது தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு எந்த விதமான உத்தியோக பூர்வமான அறிவித்தல்களையும் வெளியிடவில்லை.
0 comments :
Post a Comment