திருகோணமலையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் சகல தனியார் பஸ்களும் இன்று (06.01.2012) நள்ளிரவு முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக திருகோணமலை தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.விமலசேனதெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையின் திருகோணமலை சாலைக்கும் தனியார் பஸ் சங்கத்திற்கும் இடையே பல காலமாக வழிதடங்களில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக மோதல்கள் உருவெடுத்துள்ளதன் காரணமாக எமது சங்கத்தினர் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தனியார் பஸ் சங்னத்தலைவர் குறிப்பிட்டார்.
இப்பிரச்சனை தொடர்பில் முறைப்பாடு செய்தும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இது தொடர்பில் எந்த ஒரு தீர்வையும் இது வரை வைக்கவில்லை அதனால் பொறுப்புக்கூறக்கூடியவர்கன் இதற்கான ஒரு சரியான தீர்வை முன்வைக்கும் வரையில் பகிஸ்கரிப்பு தொடரும் என திருகோணமலை தனியார் பஸ்சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.விமலசேன தெரிவித்தார்.
No comments:
Post a Comment