பாலியல் உறவு வைக்க ஆர்வமுள்ள நண்பர்களை இணைக்கும் பேஸ்புக்கின் புதிய அப்ளிக்கேஷன்
மில்லியனைத் தாண்டி பில்லியன் கணக்கான பாவனையாளர்களைக் கொண்டுள்ள சமூகவலையமைப்பு பேஸ்புக். பேஸ்புக்கில் இலட்சக்கணக்கான அப்ளிகேசன்கள் உள்ளன. இவற்றில் பயன் மிக்க, பொழுதுபோக்குவன என பல ரகங்கள் உண்டு. அதேபோல சில அப்ளிகேசன்கள் சர்ச்சையையும் ஏற்படுத்தி விடுவன. அவ்வகையில் சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய அப்ளிகேசன் தொடர்பான செய்தியே இது.ஆம், பேஸ்புக் நண்பர்களிடையே பாலியல் உறவு வைத்துக்கொள்ள ஆர்வமுள்ளோரை இணைக்கும் புதிய அப்ளிகேசன் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவ் அப்ளிகேசனின் பெயர் டீயபெ லழரச குசநைனெ . இதனூடாக உறவு வைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ள எதிர்பால் நண்பர்களை அடையாளங் கண்டுகொள்ளமுடியும் என இதன் உருவாக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ் அப்ளிகேசன் செயற்படும் விதம் சற்று சுவாரஸ்யமானது அதாவது இதனூடாக பாவனையாளர்கள் தங்களது பேஸ்புக் நண்பன் அல்லது நண்பிக்கு உறவுக்கு தான் விருப்பமாக இருப்பதாக கோரிக்கையொன்றை விடுக்க முடியும்
ஆனால் அக்கோரிக்கை உடனே அவர்களுக்கு தெரியப்படுத்தப்படமாட்டாது மாறாக அதேநபரும் உங்களுக்கு கோரிக்கை விடுப்பாராயின் இருவருக்கும் இவ்விடயம் தொடர்பில் அறிவுறுத்தல் விடுக்கப்படும்.
இதுவரை சுமார் 2500 இற்கும் அதிகமானோர் இவ் அப்ளிகேசனை உபயோகப்படுத்த ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இவ் அப்ளிகேசனில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இதற்கு சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
0 comments :
Post a Comment