வவுனியா பட்டானிச்சூரில் நீல மழை-படங்கள் இணைப்பு
.
வவுனியா, பட்டானிச்சூர் கிராமத்தில் நீல நிற துகள்களுடன் கூடிய மழைபெய்துள்ளது. ஏற்கனவே நாட்டில் மஞ்சள் மழை, சிவப்பு மழை, மீன் மழை என்பன பெய்த நிலையிலேயே இந்நீல மழையும் வவுனியாவில் பெய்துள்ளது.இக்கிராமத்தில் இன்று பகல் பெய்தது. மழையின்போது ஒருவீட்டில் மாத்திரம் நீல நிறத் துகள்கள் மழையுடன் வீழ்ந்துள்ளதுடன் அவை மழை நீரில் கரைந்து வீட்டின் ஆங்காங்கே சில சில இடங்களில் நீல நிறத்தில் காட்சியளித்துள்ளன.இதனை அவதானித்தவர்கள் பாத்திரங்களை வைத்து மழை நீரை எடுத்த போது மழைநீர் நிரப்பப்பட்ட பாத்திரங்களிலும் நீல நிறத்திலான திரவம் காணப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த அரசாங்க அதிபர் இது தொடர்பில் விசாரணை நடத்தினார்.
மேலும் இது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment