12.5 கிலோகிராம் நிறையுடைய லிற்றோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை 150 ரூபாவினால் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த ஜுலை மாதமே சமையல் எரிவாயுக்களின் விலைகள் சீர்திருத்தப்பட்டிருந்த நிலையிலேயே மீண்டும் இவ்வதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, இதுவரை 2,246 ரூபாவாக இருந்த சமையல் எரிவாயுக்களின் விலைகள் 2,396 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment