கிளியில் மாணவர், பெற்றோர் கவனயீர்ப்புப் போராட்டம்
கிளிநொச்சி மாவட்டம், நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் அதனை நிவர்த்தி செய்துதருமாறும் பௌதீக வளப்பற்றாக்குறையை தீர்த்துவைக்குமாறும் கோரி மாணவர்களும் பெற்றோரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது தமது மாணவரி்கள் கவ்வி கற்கும் பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் நிலையில் சில ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பெற்றோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பூநகரி கோட்டக் கல்விப் பணிப்பாளர் சுப்ரமணியம் தர்மரத்னத்திடம் கருத்துத்தெரிவிக்கும் போது குறித்த பாடசாலையில் ஆரம்பப் பிரிவில் தற்போது இரண்டு ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் அதுவுக்கு காரணம் இம்முறை அதிகளவிலான பிள்ளைகள் தரம் ஒன்றுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளமையே என தெரிவித்தார்.
இந்த பாடசாலைக்கு ஏற்கனவே கட்டடமொன்றை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பாடசாலையில் ஓரளவு வளப்பற்றாக்குறை நிலவுவதை ஏற்றுக்கொள்வதாகவும் கிளிநொச்சி மாவட்ட பூநகரி கோட்டக் கல்விப் பணிப்பாளர் சுப்ரமணியம் தர்மரத்னத்திடம்.
0 comments :
Post a Comment