திலீபனின் கல்லறைப் படத்துடன் கூடிய நாட்காட்டி விநியோகம் தொடர்பில் விசாரணை!
(கலைமகன் பைரூஸ்)வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் தமிழ்ப் பத்திரிகையொன்றுடன் விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவரின் கல்லறைப் படத்துடன் கூடிய இவ்வருட நாட்காட்டி அச்சிட்டுப் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பாக பாதுகாப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என லங்காசீநீயுஸ் இணையம் தெரிவிக்கின்றது.
அச்செய்தியில் மேலும் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலி இயக்கமான எல்ரீரீஈ இயக்கத்தின் முன்னால் தலைவர்களுள் ஒருவரான திலீபனின் கல்லறையுடன் கூடிய நிழற்படத்தைப் பிரசுரித்து அந்த நாட்காட்டி பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது புலி இயக்கத்தினரின் தாக்குதல் தொடர்பான ஒன்றாகவும், பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட மந்திரியொருவர் பயங்கரவாத அமைப்பொன்றின் செயற்பாடுகளுக்கு உதவிவருவதனால் அரசாங்கம் அவசரமாக இவ்விடயம் சம்பந்தமாக அவதானம் செலுத்த வேண்டுமென்று வடக்கின் விசேட பாதுகாப்புப் பிரிவினர் தெளிவுறுத்துகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment