பிரதம நீதியரசருக்கு ஆதரவாக நீதிமன்றில் ஆஜரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் ஆகியோருக்கு எதிராகவே. இந்நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் 17வது சரத்தின்படி பாராளுமன்றத்தை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கினார்களென்ற குற்றச்சாட்டின் பேரில் இவ்விருவருக்கும் எதிராக பாராளுமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு கொண்டுவர முடியுமெனவும் பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.
பாராளுமன்ற விவாகாரங்கள் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுவதற்கு முன்னதாக இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் எந்தவிதமான அனுமதியையும் பெற்றுக்கொள்ளவில்லை
பாராளுமன்றத்தின் அனுமதியின்றி மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு சாட்சியம் அளிக்கச் சென்றமையால் பாராளுமன்ற சிறப்புரிமையை மீறி பாராளுமன்றத்தை அவமதித்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைப்பதற்கான சாத்தியம் இருப்பதாக சட்டவல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment