யாழ் குடாநாட்டில் முதலீடுகளை செய்ய சர்வதேச நிறுவனங்கள் பல முன்வந்துள்ளனவாம்.
30 வருடகால யுத்தத்தின் பின்னர், ஏற்பட்டுள்ள அமைதி சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் சர்வதேச நிறுவனங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்க முன்வந்துள்ளன என்று நாட்டின் தேசியத் தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ..
2013ம் ஆண்டுக்கான யாழ். சர்வதேச வர்த்தக மற்றும் பொருட்காட்சி நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள், தற்போது பூர்த்தியடைந்துள்ளன, உள்நாட்டு வெளிநாட்டு விற்பனை கூடங்கள், இங்கு அமைக்கப்படவுள்ளன. 4வது முறையாக இச்சர்வதேச வர்த்தக கண்காட்சி நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் தற்போது சமாதான சூழல் நிலவும் நிலையில், அங்கு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால், மக்களின் வாழ்வாதாரமும், அபிவிருத்தியடைந்துள்ளது. இவ்வாறான சர்வதேச வர்த்தக கண்காட்சியை நடாத்துவதன் மூலம், உள்ளுர் கைத்தொழிலாளர்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment