பிள்ளையை அணைத்தபடி தாய் மரணம், சடலம் கிணற்றில் - கிளி.நெஞ்சை உருக்கிய சம்பவம்
இறந்த நிலையில் தனது பிள்ளையை அணைத்தபடி கிளிநொச்சியிலுள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவரதும் அவரது பிள்ளையினதும் சடலங்கள் கிளிநொச்சிப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.இவர் தனது 5 வயது ஆண் பிள்ளையை அணைத்தபடி தனது வீட்டுக்கு அருகில் உள்ள வயல் கிணற்றில் வீழ்ந்து இறந்துள்ளதாகத் தெரியவருகின்றது..
குஞ்சுப்பரந்தன் கிராமத்தைச் சேர்ந்த சுகுமார் நிசாந்தினி (வயது 30) என்ற பெண்ணே இவ்வாறு தனது பிள்ளையுடன் உயிரிழந்துள்ளார். இதன்போது அவரது புதல்வர் கிருத்திகனும் உயிரிழந்துள்ளார்
இந்த மரணம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் விசாரணைகளை நடத்தி வருகின்றது. எனினும் குறித்த பெண் உயிரிழந்தமைக்கான காரணம் எதுவும் இதுவரை அறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை முதல் இருவரையும் காணாத நிலையில் உறவினர்கள் தேடிச் சென்றபோதே வீதி வேலை செய்பவர்களால் தமது தேவைக்காக வெட்டப்பட்ட நீர் நிரம்பிய குழியில் இருந்து இந்த சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
சடலங்கள் மீட்கப்பட்ட இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதிபதி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலங்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.
1 comments :
Very Sorrowful incident,why not the society failing to take atleast a little notice about the sorrounding people specially about those who are undergoing terrible hardship under any circumstances.This is our part of our duty rather than making daily "temple attendance" and fulfilling our desire to please the God.
Post a Comment