Wednesday, January 30, 2013

விஸ்பரூபத்திற்கு தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

‘விஸ்வரூபம்’ படத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில் வாதராடிய வழக்கறிஞர், முதலில் சட்டம் ஒழுங்கு கெடும் என்பதால் படம் தடை செய்யப்பட்டது என்று குறிப்பிட்டார்.பின்னர், அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.

“விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது சட்டப்படியாக நடைபெறவில்லை. தணிக்கை சான்றிதழ் வழங்கியதில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன” என்று சென்சார் போர்டு மீது தமிழக அரசின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்டை மாநிலங்களில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டு எந்த பிரச்சினையும் இன்றி ஓடுகிறது என்றும், சர்ச்சைக்குரிய காட்சிகள் ஏற்கனவே வெட்டப்பட்டுள்ளன என்றும் கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமன் வாதாடினார்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணை தொடர்ந்தபோது, அரசுத் தரப்பு வாதம் வேறொரு பாதையில் சென்றது. கமல்ஹாசன் தனது ‘விஸ்வரூபம்’ படத்தை வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டதால், அவருக்கு வழக்குத் தொடரும் உரிமை இல்லை என அரசு வழக்கறிஞர் வாதிட்டார். 4 தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். பின்னர் 10 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை உலகம் முழுவதும் உள்ள கமல்ஹாசன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். கோர்ட் வளாகத்தில் ஏராளமான பத்திரிக்கையாளர்கள் திரண்டிருந்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோர்ட் வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இரவு 10 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசித்தார். அவர் தனது தீர்ப்பில், ‘தமிழகத்தல் விஸ்வரூபம்’ படத்து விதிக்கப்பட்ட தடையை நீக்கப்படுகிறது. நாளை படத்தை வெளியிடலாம். வழக்கு தொடர்பான இறுதி விசாரணை பின்னர் நடைபெறும்‘ என்று குறிப்பிட்டார். இதனால் கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

முன்னதாக, மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தீர்ப்பை நாளை காலை 10.30 மணி வரை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அரசின் கோரிக்கையை நீதிபதி ஏற்கவில்லை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

2 comments :

Anonymous ,  January 30, 2013 at 11:04 AM  

Justice always in alert and active to punish the poor only.

Anonymous ,  January 30, 2013 at 8:52 PM  

Courts judgement is to be honoured.They make every decisions after careful consideration.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com