ஜ.நா.உணவு விவசாயம் இலங்கை வசம்!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைமைப் பொறுப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. ரோமை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 2013 ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரோமிற்கான இலங்கைத் தூதுவர் ஹசித பெரேரா இந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். போட்டியின்றி இந்தப் பதவிக்கான தலைமைப் பொறுப்பு ஹசித பெரேராவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
132 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் அமர்வுகளில் பங்கேற்றனர்.
இந்த அமைப்பின் ஆசிய பிராந்திய வலயத்திற்கான உப தலைவர் பதவியும் ஹசிதவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பொருளாதார சமூக நிலைமகளை மேம்படுத்தும் நோக்கில் 1964 ஆம் ஆண்டு 75 உறுப்பு நாடுகளுடன் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment