Wednesday, January 16, 2013

மன்னார் ஊடகவியலாளர்கள் மூவருக்கு சியாத் இயக்கம் என்ற பெயரில் முஸ்லீம் தீவிரவாத இயக்கத்தினர் மிரட்டில் கடிதம்

மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவருக்கு எதிராக 'சியாத் இயக்கம்'' என்ற பெயரில் கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பி தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த கொலை மிரட்டல் தொடர்பான கடிதம் நேற்றைய தினமே குறித்த மூன்று ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இக்கடிதனமானது, மன்னார் மாவட்டத்தின் தொலைக்காட்சி செய்தியாளர்களான ஏ.ரீ.மார்க், என்.ஜே.பெலிஸ்டஸ் பச்சக் மற்றும் பத்திரிக்கை செய்தியாளரான எஸ்.ஆர்.லெம்பேட் ஆகியோருக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் மன்னார் நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தின் போது நீதிமன்னறத்திற்கு ஆதரவாகவும், அரசிற்கும், அமைச்சர் றிஸாட் பதீயூதினுக்கு எதிராகவும் செயற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ஸாம் மதத்தை கேவலப்படுத்தும் விதத்தில் செய்தி எழுதப்பட்டுள்ளதாகவும் இறுதி எச்சரிக்கை எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்காளாகிய தங்களை இறுதியாக எச்சரிப்பதோடு 'அல்லாவிடம் கொடுக்கப்படுவீர்கள்' என 'சியாத் இயக்கம்'' என்ற பெயரில் எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஏனை நாடுகளைப் போன்று இலங்கையிலும் தீவிரவாதச் செயற்பாடுகளை பகிரங்கமாக முஸ்லீம்கள் ஆரம்பித்துள்ளதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்லவுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

5 comments :

Anonymous ,  January 16, 2013 at 11:51 AM  

நரி ஊருக்குள்ளே வாறதே தப்பு அதிலயும் ஊளையிட்டுக் கொண்டு வருகிறது

Ali ,  January 16, 2013 at 1:39 PM  

நரிக்கூட்டத்தின் நரி வேலை....... முஸ்லிம்கள் எவற்றிலெல்லாம் எழுத்துப் பிழை விட மாட்டார்களோ அவற்றிலெல்லாம் தெளிவாக பிழை விட்டிரிக்கிறார்கள். முஸ்லிம்களுக்கெதிராக இவ்வாறான சூழ்சிகளில் பலர் ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல. அடுத்த தடைவகள் இதே போன்று காழ்புணர்ச்சி காரணமாக ஏதாவது செய்ய நினைத்தால் யாராவது முஸ்லிம்களின் துணை கொண்டு அரபு உச்சரிப்பில் வரும் வார்த்தைகளை தெளிவாக எழுதிப் பழகுங்கள். எதிர்காலங்களில் செய்ய வேண்டிய சூழ்சிகளுக்கு வசதியாக இருக்கும்.

Anonymous ,  January 16, 2013 at 3:35 PM  

இங்கு யாரும் அம்ச்சரின் அடாவடி தனம் பேசவில்லை . அல்லாவின் பெயரில் அவரின் தாக்குதல், தமிழர் மீது பாரபட்சம் மற்றும் பயங்கரவாத செயலபடுகளை கண்டிக்க முடியவதர்கள் அவரின் தனிப்பட்டு பிரச்னையை இப்போது எதோ அந்த ஊடகவியாளர்கள் அவர்களின் மதத்துக்கு எதிராகவா எழுதினார்கள் போல மதத்தின் பெயரை சொல்லி முஸ்லிம் மக்களை உசுபேத்தி விடுகிறார்கள். வெட்கம் இல்லாத சியாத் இயக்கம்

Anonymous ,  January 16, 2013 at 4:16 PM  

சியாத் இயக்கம் - கடல்லையே இல்லையாம். எங்க இருந்தையா இந்த மாதிரி பேரெல்லாம் கண்டு பிடிக்கிறீங்க. பரவால்ல.... நல்ல முயற்சி.. இன்னும் கொஞ்சம் அழகா இந்த தாலிபான், அல்காயிதா, ஹிஸ்புல்லாஹ், லக்சரி தைபா இன்னும் வேற பேர்களும் கேள்விப் பட்டிருப்பீங்க. அதுகளையும் ஒரு சரக்குக்கு சேர்த்து ஒரு அச்சுறுத்தல் நோட்டீஸ் விட்டதா இன்னொரு பீலாவையும் சேர்த்து விட்டிரிக்கலாம்.

றூபன் நெதர்லாந்து. ,  January 16, 2013 at 4:45 PM  

இஸ்லாமிய தீவிரவாதிகள் இலங்கையின் தேசிய பாதுகபாக்புக்கு அச்சுறுத்தலாக வந்தால் கவலைதான். இந்த இடத்தில்தான் புலிகள் வேண்டுமென்பது. கல்முனைக்குடியில் இவனுகளை முட்டுக்காலில் நிப்பாட்டி வைத்து கண்ணன் ஆயுதங்களை வாங்கிட்டு போன ஞாபகம் இப்போதும் உண்டு.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com