சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சையின் மீளாய்வு நிறுத்தப்பட்டுள்ளது! - பரீட்சைகள் ஆணையாளர்
2013 ஆம் ஆண்டிற்கான சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சையின் பெறுபேறு மீளாய்வை நிறுத்துமாறு சட்டக் கல்லூரியின் அதிபர், எழுத்துமூலம் தமக்கு அறிவித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ. எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
சட்டக் கல்விச் சபையின் அனுமதியின்றி அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது என, சட்டக் கல்லூரியின் அதிபர் தனக்கு அறிவித்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்தப் பரீட்சையின் பெறுபேற்று மீளாய்வு மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment