சவூதியின் உதவியை ஏற்காவிடின் திருப்பி அனுப்பப்படும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு
சவூதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட மூதூர் பணிப் பெண் ரிசானாவின் மரணத்திற்காக சவூதி அரேபிய இளவரசரின் சட்ட ஆலோசகர், வழங்கிய உதவிப் பணத்தை ரிசானாவின் குடும்பம் ஏற்காவிடின் அப்பணத்தை திரும்பவும் சவூதிக்கே திருப்பியனுப்ப உள்ளதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். சவூதியின் எந்த உதவியும் தனக்கோ தனது குடும்பத்திற்கோ வேண்டாம் என ரிசானாவின் தாயார் தெரிவித்துள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரிசானாவின் குடும்பத்திற்காக சவூதி அரேபிய இளவரசரின் சட்ட ஆலோசகர் 10 இலட்சம் ரூபாவை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் கையளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
.
3 comments :
மனம் வருமா ? எடுத்து நமது சொந்த செலவுகளுக்கு வைத்துக்கொள்ளலாம் .உஸ்ஸ் இது ரகசியம் தலைவா ,இன்னும் ஒரு வாரத்தில் திருப்பி அனுப்பி விட்டேன் என்று அறிக்கை விடுங்கள் எல்லாம் சரியாகி விடும் ,இதுதான் உங்களின் தொழில் ரகசியம் ,மட மக்களுக்கு இதுவெல்லாம் புரியவே மாட்டாது ,உங்கள் பணி தொடரட்டும் ,முடிந்தால் இம்முதலை வைத்து காத்தான்குடியில் இன்னுமொரு முதலீட்டு வங்கி திறந்தால் எப்படி இருக்கும் ......சும்மா அதிருதில்ல ....!
Hope you would send back everything to Saudi and produce the acknowledgement paper to the responsible persons.This would prove that have done a good job.If not it is clear and everyone can digest what has happened to Saudi's unwanted presents.
/ காட்டுமிராண்டிகளின் ஒரு செப்புக் காசு கூட வேண்டாம். அவங்களிடம் பணத்தைப் பெற்று ரிசானாவை அகெளரவப்படுத்தாதீர்கள் \\ இது தன்மானமுள்ள ரிசானாவின் தாயாரின் துணிச்சலான, நேர்த்தியான பேச்சு.
// நாங்கள் மனிதபண்பு , மனிதநேயம், மனச்சாட்சி அற்ற மிருகங்களின் மதவாதக்கும், சட்டதிற்கும், பணத்திற்கும் அடிமைப்பட்டவர்கள் அல்ல. நாங்கள் ஏழைகள் எனினும் தன்மானமுள்ள, அறிவுள்ள நவீன மனிதர்களாக வாழ விரும்புகிறோம். எனவே தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் \\ இது பகுத்தறிவுள்ள முஸ்லிம் பிள்ளைகளின் வேண்டுகோள்.
இவையாவும், பணத்திற்காக, தங்களின் வசதிகளுக்காக, காட்டுவாசி சவுதியர்களையும், மதத்தையும் தூக்கி தலையில் வைத்து காவும் முதுகு எலும்பில்லாத நம்நாட்டு சுயநல முஸ்லிம் தலைவர்கள், அரசியல் வாதிகள், உலாமாக்கள், மௌலவிகள், லெப்பைகளுக்கு விழுந்த ஒரு செருப்படி.
முக்கியமாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு விழுந்த ஊத்தை செருப்படி.
Post a Comment