(கலைமகன் பைரூஸ்)களனிப் பிரதேச சபை உறுப்பினர் ஹசித்த மடவளையின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களில்,மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவின் செயலாளர்கள் இருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளரான ‘சிங்கப்பூர் சரத் என்றழைக்கப்படும் சரத் குமார மற்றும் அவரது இணைப்புச் செயலாளரான சமன் நிஷாமன் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இவர்களுடன் சோமரத்ன குமார பெரேரா, அவரது மகன் ரங்கன குமார பெரேரா, சத்துரங்க வீரசேக்கர ஆகியோரும் கைதாகியுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment