Sunday, January 6, 2013

ஜப்பானின் இரண்டு போர்க் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில்-படங்கள் இணைப்பு

நல்லெண்ண அடிப்படையில் ஜப்பானின் கடற்படையினருக்கு சொந்தமான 'சுசுனாமி' மற்றும் 'கிரிசேமி' என்ற இரண்டு யுத்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத் வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இந்த கப்பல்கள் இரண்டும் இலங்கைக்கு நேற்று சனிக்கிழமை வந்தடைந்துள்ளதாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருக்கும் என்றும் கடற்படையின் பேச்சாளர் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன இந்த இரண்டு கப்பல்களும் ஜப்பான் கடற்படையினரிடம் உள்ள அதி நவீன கப்பல்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

151 மீற்றர் நீளமான இரண்டு யுத்த கப்பல்களில் 'சுசுனாமி'என்ற கப்பல் 4650 தொன் நிறைகொண்டது. 'கிரிசேமி' 4550 தொன் நிறைகொண்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.





No comments:

Post a Comment