இளங்குடும்பப் பெண் கிணற்றிருந்து சடலமாக மீட்பு கொலை எனச் சந்தேகம் ? -படம் இணைப்பு
இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் ஒன்று கிணற்றுக்குள் இருந்து கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று கோப்பாய் மத்திப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் பலானை சூசையப்பர் வீதி வீதி கோப்பாய் மத்தி என்ற பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த கமலதீபன் கயல்விழி (வயது 23) என்ற குடும்பப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் தகராறு இடம்பெற்றதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களது காணியிலுள்ள கிணற்றுக்குள் குறித்த பெண் சடலமாக இருப்பதை அயலவர்கள் அவதானித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த பதில் நீதிவான் மு.திருநாவுக்கரசு விசாரணைகளை மேற்கொண்டதோடு சடலத்தை பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் பெண்ணின் கணவன் நேற்றுக் காலை கோப்பாய் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment