இந்திய இராணுவ ஹெலிகாப்டர் மீது மாவோயிட்ஸ்கள் தாக்குதல் ஒருவர் காயம் அவசரமாக தரையிறங்கியது ஹெலிகாப்டர்
இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா வனப்பகுதியில் இன்று ராணுவ ஹெலிகாப்டரில் பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து சென்ற போது மாவோயிஸ்ட்கள் ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு இராணுவ வீரர் காயமடைந்துள்ளதோடு இராணுவ ஹெலிகாப்டரும் சேதமடைந்துள்ளது. தண்டேவாடா வனப்பகுதியில் இன்று ராணுவ ஹெலிகாப்டரில் பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து சென்றது.
பின்னர் அந்த ஹெலிகாப்டர் திடீரென ராடார் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. இதனால் அதனை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பின்னர் அந்த ஹெலிகாப்டர் சுக்மா மாவட்டம் டெலிவாரா என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியதால் ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில் ஒரு வீரர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment