ஐநா சபைக்கு முன்னால் எதிர்ப்பார்ப்பாட்டம்!
(கலைமகன் பைரூஸ்) இலங்கைக்கு எதிராக அவசரமாக சர்வதேசத் தலையீடு அவசியமென்று நிவ்யோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்திற்கு முன்னால் எதிர்ப்பார்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தில், குற்றவியல் பிரேரணையை அவசரமாக வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பார்ப்பாட்டத்தில் புலம்பெயர்ந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள், தனியார் இயக்கங்களின் செயற்குழு உறுப்பினர்கள், இந்நாட்டிலிருந்து தலைமறைவாகச் சென்றுள்ள ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டதாக அமெரிக்காவிலிருந்து வெளிவருகின்ற செய்திகள் குறிப்பிடுகின்றன.
இது தொடர்பாக ஒன்றிணையுமாறு கேட்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களும் குரல் கொடுத்துள்ளன.
No comments:
Post a Comment