Monday, January 21, 2013

மட்டக்களப்பில் குடும்பஸ்தரை காணவில்லை மனைவி பொலிஸில் முறைப்பாடு

மட்டக்களப்பு குடும்பஸ்தர் ஒருவர் கடந்த இரண்டு தினங்களாக காணாமல் போயுள்ளார் என அவரது அவரது மனைவி; மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இவர் ஒரு சிகரட் கம்பனி ஒன்றில் வேலை செய்வதாகத் தெரியவருகின்றது.குறித்த நபர் கடந்த சனிக்கிழமை காலை வழமைபோல் சிகரட் விநியோகத்திற்காகச் சென்றுள்ளார்.
ஆனால் அன்றைய தினம் பகல் இவரது முச்சக்கர வண்டி காத்தான்குடி நகரின் பிரதான வீதியில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் 4 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா பணத்துடன் தலைமறைவாகியுள்ளார் என சிகரட் கம்பனி உரிமையாளரும் பொலிஸில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com