Thursday, January 3, 2013

யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க நிர்வாகம் இணக்கம்

தடைபட்டுள்ள யாழ்.பல்க்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கு உயர்கல்வி அமைச்சும், யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமும் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இன்று யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே இவ்விணக்கப்பாடு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படாத வகையில் விரைவில் யாழ். பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்குமாறு கோரியதை அடுத்து, அதற்கு இணக்கம் தெரிவித்த பல்கலைக்கழக நிர்வாகம் விரைவில் பல்கலைக்கழக கல்விச் செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உயர்க் கல்வி பிரதி அமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்க, உயர்க்கல்வி அமைச்சின் செயலாளர், யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் செல்வி. வசந்தி அரசரட்ணம், பீடாதிபதிகள், யாழ் இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற அசாம்பவித சம்பங்களைத் தொடர்ந்து பல்கலைக்கழக கல்வி சார் நடவடிக்கைகள் முடங்கியுள்ளன என்பதும் குறிப்பிட்தக்கது.


1 comment: