'உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?' என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார் சஜித்
மக்களுக்குச் சேவை செய்வதற்கு பதவி மற்றும் வரப்பிரசாதங்கள் அவசியமில்லை என்றும், என்றும்போல் மக்களுக்கு ஆதரவான பணிகளை இன்னும் தொடர்வேன் என்றும் சொல்கிறார் ஐதேகவின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச.
1994 ஆம் ஆண்டு அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டது முதல் இதுவரை சகல மக்களும் ஆட்சியாளரின் பலம் இன்றி, பட்டம் பதவிகளின்றி ஒத்துழைப்பு நல்கினார்கள் என்றும் குறிப்பிட்டார்.
நிக்கவரெட்டியவில் வெள்ளப் பெருக்கினால் பாதிப்புற்ற மக்களுக்கு அரிசி பகிர்ந்தளிக்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஐதேக உறுப்பினர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும் போது,
‘இந்நாட்களில் என்னைச் சந்திக்கின்ற, தொலைபேசி மூலம் என்னைத் தொடர்பு கொள்கின்ற எமது கட்சியைச் சேர்ந்த சகோதரர்கள் கேட்பது ஒரே கேள்வியைத்தான்... அதுதான், இனி என்ன செய்யப் போகிறீர்கள்? அவர்களுக்குப் பொதுவாக ஒரு விடையே என்னால் அளிக்க முடியும். என்னைச் சேர்ந்துள்ள, என்னில் நம்பிக்கை வைத்துள்ள அபிமானிகளுக்கு என்றும் போல் தொடர்ந்து பணிவிடை செய்வேன். அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வேன். என்னுடன் நாளுக்கு நாள் கைகோர்த்து என்னை உற்சாகமூட்டும் அனைவரும் இணைத்துக் கொண்டு எதிர்காலப் பணிகளை முன்னெடுத்துச் செல்வேன்... என்றும் குறிப்பிட்டார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment