Thursday, January 3, 2013

தொற்றல்லாத நோய்களைத் தடுக்க விசேட திட்டம்!

தொற்று நோய் அல்லாத நோய்களை முற்றாகத் தடுப்பதற்கு சுதேச வைத்தியத்துறை மற்றும் சுதேச உணவு வகைகளின் பயன்பாட்டினை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவதற்கு 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்கடர் நிஹால் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாரம்பரிய சுதேச வைத்திய முறைமையினைப் பாதுகாப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் அடுத்த மூன்று வருடங்களில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும், சுதேச வைத்தியத் துறையினையின் அபிவிருத்திக்கென சிறந்த வைத்தியர்களை உருவாக்குவதற்கான திட்டமொன்றை செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக 2013 ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 25 மில்லியன் ரூபா நிதியமைச்சரும், ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷவால் முன்மொழியப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் மற்றும் ஆயுர்வேத உற்பத்திகள் உள்நாட்டு சந்தையில் நுழைவதைத் தடுப்பதற்கு மருந்து வகைகளின் பெயர்களை மூன்று மொழிகளிலும் லேபல்களை ஒட்டுவதற்கும், கடுமையான தரக்கட்டுப்பாடுகளை பின்பற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்கடர் நிஹால் ஜயதிலக்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment