Thursday, January 3, 2013

நல்லூர் வளாகத்திலுள்ள காவலரணை அகற்ற இராணுவம் இணக்கம்

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவலரணை அகற்றுவதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக இன்று வியாழக்கிழமை யாழ் மாநகர சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

நல்லூர் ஆலயப்பிரதேசம் பல்லின மக்கள் வருகை தந்து செல்லும் இடமமாக அமைந்துள்ள இடத்தினுள் பாதுகாப்பு படைத்தரப்பினரால் காவலரண் அமைத்திருந்தமை சில நாட்களாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திவந்தது.

இதனை உடனடியாக கவனத்தில் எடுத்த மாநகர முதல்வர் யாழ் பாதுகாப்பு படைகளின் தளபதியுடன் கலந்துரையாடப்பட்டதையடுத்து இரண்டு நாட்களுக்குள் நல்லூர் ஆலயச் சூழலில் உள்ள காவலரண் அகற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாக யாழ். மாநகரசபையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com