ஆட்கடத்தலுக்கு ஆளாகி தவிக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கென புதிய மத்திய நிலையத்தை அமைக்க சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்ச்சர் திஸ்ஸ கரலியத்தவின் இத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையம் அமைக்கப்பட்ட பின், ஆட்கடத்தலுக்கு உள்ளாகி அகப்படும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் சிறை மற்றும் தடுப்புக் காவலில் இருக்க வேண்டிய நிலை ஏற்படாது.ஆட்கடத்தலுக்கு உள்ளாகும் பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாப்பதற்கான சர்வதேச ஏற்பாட்டிற்கும் இத்திட்டம் வலுசேர்க்கவுள்ளது.
அத்துடன் குறித்த நிலையம் அமைக்கப்படும் இடத்தை பாதுகாப்பு கருதி வெளியிடாதிருக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment