Tuesday, January 22, 2013

பொதுநலவாய அமைப்பு தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறும் என்பதில் மாற்றம் இல்லையாம்.

பொதுநலவாய அமைப்பு அரச தலைவர்களின் மாநாடு இவ்வருட நவம்பர் மாதம் ஏற்கனவே திட்டமிட்டப்படி நடைபெறுமென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு அங்கத்துவ நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இம்மாநாட்டின் போது இவ்வருடம் பொதுநலவாய அமைப்பு அரச தலைவர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளும் பொறுப்பு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மாநாடு தொடர்பான தகவல்கள் அங்கத்துவ நாடுகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மாநாட்டை கோலாகலமாக நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இம்மாநாடு இலங்கையில் நாடாத்தப்படக்கூடாது என புலம்பெயர் நாடுகளிலுள்ள புலி ஆதரவு அமைப்புக்கள் பல தீவிர பிரச்சாரங்கள் மேற்கொண்டுவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


1 comments :

Anonymous ,  January 22, 2013 at 9:12 PM  

As a leader of the commonwealth countries Her Majesty's Queen Elizabeth would take a decisive and
reasonable decision.She is the most politically experienced person in the world,because during her service in the office she may have seen number of governments and even now she has the rights to advice the government encourage the government and to warn the government.Srilanka as a long standing country she has the rights to talk to the government and we are sure that she will never boycott the conferrence and bring dishonour to the commonwealth nations.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com