Friday, January 18, 2013

அமெரிக்காவின் மியாமியில் இரண்டு விமானங்கள் மோதல் பாரிய அனர்த்தம் மயிரிழழையில் தவிர்ப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரமான மியாமியில் நேற்று இரவு 2 பயணிகள் விமானங்கள் மோதிக்கொண்தில் அதில் பிரயாணம் செய்த 590 பயணிகளும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.மியாமி சர்வதேச விமான நிலையத்தில் 350 பயணிகளுடன் ஏர்பிரான்ஸ் விமானம் பாரிசுக்கு புறப்பட தயாராக இருந்தது.அப்போது 240 பயணிகளுடன் அங்கு தரையிறங்குவதற்காக கீழ்நோக்கி வந்த அர்ஜெண்டினா விமானம், ஏர்பிரான்ஸ் விமானத்தின் மேல்பகுதியில் மோதியபடி ஓடுதளத்தில் இறங்கியது.

இதில் ஒரு விமானத்தின் இறக்கையும், மற்றொரு விமானத்தின் வால் பகுதியும் சேதமடைந்தது. சம்பவம் நடந்த உடனே மீட்புக்குழுவினர் விரைவாக செயல்பட்டு, இரு விமானங்களிலும் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com