புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கை அகதி அவுஸ்ரேலியாவில் தற்கொலை செய்து சாவு
அவுஸ்ரேலியாவின் பேர்த்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை புலிடக் கோரிக்கையாளர் ஒருவர் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை காரணமாக தற்கொii செய்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றனர். இவர் வார இறுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்கொலை செய்துகொண்ட நபரின் மனைவியும் பிள்ளையும் இலங்கையில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக இவருக்கு அறிவிக்கப்பட்டதா என்பது தொடர்பில் கூறுவதற்கு அவுஸ்ரேலியக் குடிவரவுத் திணைக்களம் மறுத்துள்ளது.
முகாமில் வசிப்பதற்காக விஸா பெற்றிருந்த இவர் சனிக்கிழமையன்றே வைத்தியசாலையில் வைத்து மரணமடைந்துள்ளார்.
இவருடைய ஆளடையாளத்தை குடிவரவுத்திணைக்களம் வெளிப்படுத்தவில்லை. குடிவரவுத்திணைக்களம் இவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.
இவரது உடல் அவுஸ்திரேலியாவில் தகனம் செய்யப்பட்டு சாம்பல் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு நவம்பரில் இருந்து 10336 பேருக்கு முகாமில் வாழும் விஸா வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment