ஐபிஎல் : மும்பை இந்தியன்ஸுடன் இணைந்தார் அனில் கும்பிளே!!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை ஆலோசகர் பதவிலிருந்து விலகியுள்ள இந்தியாவின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இனைந்துள்ளார்.இதன் மூலம் விரைவில் தொடங்கவுள்ள ஆறாவது ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் செயற்படவுள்ளார்.
இது குறித்து கும்ளே கருத்து தெரிவிக்கையில் 'ரிலையன்ஸ் குழுவினரிடம், இந்திய விளையாட்டுத்துறை குறித்து சிறந்த, நிச்சயமான ஒரு கொள்கை உள்ளதை அவர்களுடனான பேச்சுக்களின் போது அறிந்து கொள்ள முடிந்தது. ஐபிஎல் அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறந்த அனுபவமுள்ள வீரர்களை கொண்டிருப்பதுடன், நல்லதொரு போட்டி அணியாக உள்ளது. அவர்களின் தலைமை ஆலோசகராக இனைந்து கொண்டது எனக்கு கிடைத்த கௌரவம்' என்றார்.
மும்பை இந்தியன்ஸ் குழுமத்தின் உரிமையாளர் நிதா அம்பானி தெரிவிக்கையில், அனில் கும்ளே சர்வதேச தகுதி நிறைந்த மிகச்சிறந்த வீர மாத்திரமல்ல. மிகச்சிறந்த ஆலோசகர். இந்தியாவின் முன்னணி விளையாட்டு வீரர்களில் ஒருவரான அவர் எம்முடன் இணைந்து கொண்டமை மகிழ்ச்சிக்குரியது என்றார்.
இதேவேளை அனில் கும்ப்ளேயின் இதுநாள் வரையிலான செயற்பாடுகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து அவருக்கு பிரியாவிடை கொடுத்துள்ளது பெங்களூர் அணி. அணியை திறம்பட வளப்படுத்த அணில் கும்ப்ளே பெரிதும் உதவினார் என பெங்களூர் அணியின் நிறுவனர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment