Wednesday, January 16, 2013

அயல்நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் தருவிப்பதற்கு தனியார் நிறுவனங்கள் அரசிற்கு அழுத்தமாம்.

இலங்கையில் தற்போது தனியார் துறையில், ஏராளமான வேலைவாய்ப்புகள் காணப்படுகின்றன என்றும் சுமார் 7 வீதமான தொழிலாளர்கள், தனியார் துறையினருக்கு தேவைப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்பி திஸாநாயக்க அயல் நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் தருவிப்பதற்கு, அனுமதி வழங்குமாறு தனியார் நிறுவனங்கள், அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.

தவுலகலவில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித் அமைச்சர் இலங்கையில் வேலையில்லாதோரின் வீதம் துரிதமாக வீழ்ச்சியடைந்து வருவதாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பொருத்தமான முறையில் இளைஞர்கள் தொழிற்பயிற்சிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும், கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் ஆடை உற்பத்தி துறையில் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. நவீன மற்றும் உயர் சந்தைகளுக்கு ஒரு லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். கட்டிட நிர்மாணம், தச்சு தொழில், பாதுகாப்பு மற்றும் நகர சுத்தி தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. பெருந்தோட்டத்துறையில் வேலை செய்வதற்கும், ஆட்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், அரசாங்க தொழிலிற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

வேலைவாய்ப்பின்மை தற்போது நாட்டில் கிடையாது. எந்த தொழிலை தெரிவு செய்கின்றது என்ற, பிரச்சினை தான் நாட்டில் காணப்படுகிறது. வர்த்தகர்களும், தொழில் முயற்சியாளர்களும் தஙகளுக்கு தேவையான தொழிற்படை இல்லாமையினால், பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் என்றார்.

No comments:

Post a Comment