Tuesday, January 29, 2013

குறைந்த வருமானம் உள்ளவர்களுக்காக கொம்பனித்தெருவில் மாடிவீடு

கொம்பனித்தெருவில் குடிசைகளுக்கு பதிலாக, சகல வசதிகளுடனும் கூடிய நிரந்தர மாடி வீட்டு கட்டிடத்தொகுதியை நிர்மாணிக்க, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. கொழும்பு நகரில் வாழும் குடிசை வாசிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கிடையே இவ்வீடுகள் வழங்கப்படவுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்படும் வீடுகள், ஹேனமுல்ல, அளுத்மாவத்தை, பேர்குசன் வீதி, சிவில் சி பெரேரா மாவத்தை, எதிரிசிங்க மாவத்தை, மாளிகாவத்த, மாளிகாவத்த புகையிரத நிலையத்திற்கு சொந்தமான காணி, தெமட்டகொட புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணி, 31வது தோட்டம், ஒறுகொடவத்த செயற்திட்டம், 54 மற்றும் 66ஆம் தோட்ட செயற்திட்டம், கொலன்னாவ அரச தொழிற்சாலை வளாக பிரதேசங்களில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொம்பனித்தெருவில் உள்ள குடிசைகளை அகற்றுவது தொடர்பாக மக்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டம், நேற்று பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் இடம்பெற்றது, பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இதன்போது முன்வைக்கப்பட்டதுடன், அதற்காக செயற்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும், பாதுகாப்பு செயலாளர் விளக்கமளித்தார். இம்மக்கள், தற்போது வாழும் நிலைமையை விட, உயரிய வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார். கொம்பனித்தெருவில் வசிப்போருக்கான வீடமைப்பு கட்டிடத் தொகுதி, அப்பிரதேசத்திலேயே நிர்மாணிக்கப்படுகிறது. நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் வரை, இக்குடிசை வாசிகளை வேறு இடங்களில் குடியமர்த்த, விசேட வேலைத்திட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையானவாறு மாற்று சந்தர்ப்பங்களை தேர்ந்தெடுக்கவும், வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் தீர்மானங்களை, ஒரு வாரத்திற்குள் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவிக்க வேண்டும். எந்தவொரு நபருக்கும் அநீதி இழைக்கப்படாதவாறு தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென, பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

இந்த மாடி வீட்டு கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர், தற்போதைய நிலைமையை விட, மக்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும். எவருக்கும் அநீதி இழைப்பது, எமது நோக்கமல்ல. தேவையான ஒழுங்குகளை மேற்கொண்டு, மக்களின் தேவைகளை பூர்த்தி செய், நடவடிக்கை எடுத்துள்ளோம். கொழும்பில் உள்ள வேறு மாடி கட்டிடங்களை போன்று அல்லாமல், மாற்றமான வசதிமிக்க மாடிவீட்டு கட்டிடத் தொகுதியாக இவை அமையவுள்ளன. அதி உயரிய வசதிகளுடனேயே, நாம் நிர்மாணிக்கின்றோம். சூழலில் ஏற்படக்கூடிய மாற்றம், மிகப்பெறுமதிமிக்கதாக அமையும். உங்களுக்கு இவ்வாறானதொரு வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக்கொடுப்பதே, எமது நோக்கமாகும். உண்மையிலேயே, நீங்களே வெற்றியாளர்களாக மாற்றம் பெறுவீர்கள். வாழ்வதற்கு சிறந்த சூழவை ஏற்படுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதே, நகர அபிவிருத்தி அதிகார சபையின் நோக்கமாகும். நாம் எந்த சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு கிடைக்குமு; வெற்றிகள் தொடர்பிலேயே, கவனம் செலுத்துகின்றோம். இதுவே இந்த செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.)

சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால உள்ளிட்டோரும், இதில் இணைந்திருந்தனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com