பல்கலையில் இருந்த பொலிஸ் சாவடி நீக்கம்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கடமைக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரை பொலிஸ் திணைக்களத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அங்கிருந்து விலக்கியுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெவ்ரி தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பல்கலை மற்றும் பல்கலை சூழலில் நடைபெற்ற வன்முறைச்சம்பவத்தை தொடர்ந்து அரச சொத்துக்ளை பாதுகாக்கவும் மாணவர்களின் பாதுகாப்பு கருதியே இந்த விசேட பாதுகாப்பு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment