பிலியந்தல மொரதன பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை கடற்படையில் பணிபுரியும் தந்தை, தனது கை மற்றும் காலால் அடித்து, உதைத்து ஒரு வயது மற்றும் நான்கு மாதம் நிறைந்த தனது பெண் குழந்தையை கொலை செய்த கொடூர சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.
வீட்டில் கணவன் - மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் கடும் ஆத்திரமடைந்த தந்தை தனது பெண் குழந்தையை அடித்து, உதைத்துள்ளார் இந்ததாக்குதலில் மூச்சுப்பேச்சை இழந்த குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment