மகிழ்ச்சியான சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொள்வதே மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு சிறந்த மார்க்கமாகும். இதற்கு என்டோபின் எனும் ஓமோன்களை உடலில் உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். எட்டோபின் ஓமோனை உற்பத்தி செய்வதற்காக பல்வேறு முறைமைகளை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
நாள் ஒன்றுக்கு குறைந்தது 8 கிண்ணங்கள் நீரை அருந்துவது சிறந்த உபாயமாகும். தினமும் சிரித்த முகத்துடன் காணப்படுவதும் அல்லது நாள் ஒன்றுக்கு 12 முறையாவது நன்றாக சிரிப்பதும் இதில் முக்கியமானதாகும்.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று வாழ்வதும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு சிறந்த மார்க்கமாகும். உடற் பயிற்சி, தியானம், நன்றாக சுவாசித்தல், இசையை செவி மடுத்தல், இயற்கையின் வனப்பை இரசிப்பது, பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது மற்றும் போசாக்கான உணவுகளை ருசிப்பது, என்டோபின் ஓமோன் அதிகரிப்பதற்கான சிறந்த உபாயங்களாகும்.
அமைதியின்மை, அசௌகரியம் போன்றவற்றினால் ஏற்படுத்திக் கொள்ளும் சம்பவங்களால் மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மன அழுத்தம் பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைவதுடன் அதிலிருந்து மீட்சி பெறுவதே நோயற்ற வாழ்வு வாழ்வதற்கான சிறந்த மார்க்கம் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment