Tuesday, January 22, 2013

ரத்த ஓட்டத்தை சீராக்கும் தக்காளி

லேசாக காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தாலோ அல்லது உடல் வலிக்கோ, தலைவலிக்கோ `ஆஸ்பிரின்’ மாத்திரை எடுத்துக்கொள்வது பலரது வழக்கம்.அந்த மாத்திரையை சாப்பிட்டவுடன் அவற்றில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.ஆனால், இந்த ஆஸ்பிரின் மாத்திரைக்கு பதிலாக தக்காளியை சாப்பிடலாம் என்று ஒரு மருத்துவ ஆய்வில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

தக்காளி விதையில் இயற்கையாக ஜெல் போன்ற திரவம் காணப்படுகிறது.அந்த திரவமானது ரத்தம் உறைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும், சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதும் இந்த ஆய்வில் மேலும் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறும்போது, “ரத்த ஓட்டம் சீராகுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சிறிய அளவில் தினசரி ஆஸ்பிரின் மாத்திரையை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அது, வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தி அல்சர் ஏற்பட வழிவகுக்கும் தன்மை உடையது. ஆனால் தக்காளி சாப்பிடுவதால் அதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படாது” என்று தெரிவித்தனர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com