இராணுவத்தில் இணைந்துகொண்ட தமிழ் யுவதிகள் கொழும்பிற்கு சுற்றுலா செல்கின்றனர்.
இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட 103 தமிழ் யுவதிகளும் கொழும்பிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. நாளை முதல் எதிர்வரும் 14ம் திகதி வரையான ஒரு வார காலம் கொழும்பில் தங்கியிருந்து 12 ஆம் திகதி வரை கொழும்பின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
தமிழ் யுவதிகளை இராணுவத்தில் இணைந்துகொண்ட பின்னர் கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு அழைத்து வருவது இதுவே முதற்தடவையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment