Thursday, January 17, 2013

களனித் தொகுதி அமைப்பாளராவதற்கு நான் தயார்! - மர்வின்

களனித் தொகுதியின் அமைப்பாளர் பதவியை மீண்டும் தனக்கு வழங்கினால் அதனைத் தான் பெற்றுக் கொள்ளத் தயார் என்று குறிப்பிடுகிறார் அமைச்சர் மர்வின் சில்வா. தான் களனிக்குச் செய்துள்ள பணிகள் பற்றி களனி மக்கள் நன்கறிவர் என்று குறிப்பிடுகின்ற அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது:

‘இலங்கைச் சுதந்திரக் கட்சி ஒழுக்கக் கோட்பாட்டுடன் கூடிய கட்சி. அதனால்தான் நான் களனித் தொகுதியாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தேன். ஜனாதிபதி களனி அமைப்பாளர் பதவியை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டால், நான் ஏற்றுக்கொண்டு செயற்படுவேன்.

களனி மக்கள் எனக்கு 25000 வாக்குகளை அளித்து என்னைப் பிரதிநிதியாக்கினர். கம்பஹா மாவட்டத்தில் 152000 வாக்குகளைப் பெற்றுக்கொண்டேன். நான் களனித் தொகுதிக்குச் செய்த அபிவிருத்திப் பணிகள் பற்றி மக்கள் நன்கறிவர். களனி மக்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

கொலைகள் என்னுடன் தொடர்புற்றவையல்ல. நான் அதற்கு எனது பலத்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறேன். ஹஸித்த மடவளை நல்லவர். அவர்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள் தான் பூதகரமாகி கொலையளவு போய்நின்றிருக்கின்றது. அரசியல் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக அறிவுரை பெற்றுக் கொள்வதற்காக பல்கலைக்கழக பேராசிரியர்களுடன்கூடிய குழுவொன்றை நியமித்துக் கொண்டார்கள். அதன் தலைவராக பௌத்த பாலி பல்கலைக் கழகத்தின் மொழிகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் உத்துராவல தம்மரத்தன தேரர் தொழிற்படுகிறார்.’


(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment